ஜனாதிபதி இன்று உக்ரேய்னுக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனு கோவிச்சின் விசேட அழைப்பினையேற்று உக்ரேய்னுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி உக் ரேய்ன் நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யவிருப்ப துடன் இலங்கை- உக்ரேய்ன் வர்த்தக பேரவை கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.
இவ்விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார, சுற்றுலா மற்றும் மனிதவள அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேய்னுக்கு ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் செல்லவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply