கே.பி. ஏற்பாட்டில் புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை பயணம்
விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் கூறினார். கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுவதை சார்ள்ஸ் ஒப்புக்கொண்டர்.
இலங்கை அரசாங்கத்துடைய ஆணையின் கீழ் கே.பி. இருப்பதாக கூறலாம், ஆனாலும் கே.பி. அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறமுடியாது என்று சார்ள்ஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, புலம்பெயர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை வந்து சென்றதை இலங்கையின் ஊகடத்துறை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்துள்ளார். அனைவரையும் அரவணைக்கும் இலங்கை அரசின் அரசியல் வழிமுறையின் ஒரு அங்கம்தான் இந்த முயற்சி என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply