விமானத் தாக்குதலில் முக்கிய பெண் புலி உறுப்பினர் பலி
பரந்தன் மீது விமானப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட பெண் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
விமானப் படைக்குச் சொந்தமான மிக் -27 கிபீர் விமானங்களும் எப்-7 ரக விமானங்களும் நேற்று ஒன்பது தடவைகள் பரந்தனிலுள்ள புலிகளின் நிலைகள் மீது பலத்த தாக்குதல்களை மேற்கொண்டன.
இதேவேளை, விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து மேலும் 18 பொதுமக்கள் இன்று காலையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர். இவர்களில் 12 ஆண்களும் ஐந்து பெண்களும் நான்கு வயது சிறுவனும் அடங்குகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply