மடு ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி : பங்குத் தந்தை

மருத மடு அன்னை ஆலயத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறை வடைந்திருப்பதாக மடு தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட்திரு பி.எல்.பி. டெல்மன் கிலாஸ் தெரிவித்தார். இம்முறை ஜூலைப் பெருவிழாவில் 3 லட்சம் யாத்திரிகர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. யாத்திரிகர்களுக்கான குடி நீர், போக்குவரத்து,சுகாதார சேவைகள், தங்குமிட வசதிகள், பாதுகாப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் பகுதியில் இருந்து ஏராளமான யாத்திரிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மடுப்பகுதிக்குள் மதுபானம், கேளிக்கை, ஆடல் பாடல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பங்குத் தந்தை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply