ஜி.எஸ்.பி. தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை
இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி. தொடர்பில் பரிந்துரைக்கும் மனுவொன்றை அமெரிக்க வர்த்தக யூனியன் ஒன்று அமெரிக்க அரசிடம் கையளித்துள்ளது. இந்நிலையில் அந்த மனு தொடர்பில் பரிசீலிக்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, இலங்கைக்கு வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஆகஸ்ட் 15 ம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மூலம் இலங்கை தயாரித்த ஆடைகள் உட்பட 3,400 வகையான பொருள்கள் ஏற்றுமதி வரி இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அதனால் இலங்கைப் பொருள்களை ஐரோப்பிய நாடுகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழப்பு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply