பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் சில குழுக்கள் இலங்கைக்கு எதிராக தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் : ஜனாதிபதி

பயங்கரவாத்திற்கு எதிராக போரிட்டு, பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகளை பாதுகாத்தமை தொடர்பாக இலங்கை உலகத்திற்கு முன்னுதாரணத்தை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சகல இனங்களும் சுதந்திரத்தின் பலனை அனுபவிப்பதாகவும் மகிந்த கூறியுள்ளார்.

உக்ரேனுக்கு உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அந்த நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவ்ச்சை சந்தித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை தற்போது அபிவிருத்தி நோக்கி சென்றுக்கொண்டிருப்பதுடன் பிளவுப்பட்டுள்ள மனங்களை சீர்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் சில குழுக்கள் இலங்கைக்கு எதிராக தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளார். இந்த சூழ்ச்சிகளை முறியடிக்க ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தையும் மகிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply