ஜனாதிபதி மஹிந்த – உக்ரேன் வர்த்தக சமூகம் சந்திப்பு

அச்சமின்றி அனைவரும் இலங்கைக்கு வந்து முதலீடுகளை செய்யுமாறு உக்ரேனிய வர்த்தக சமூகத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.உலகிலேயே முதலீடு செய்யக் கூடிய சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை இன்று திகழ்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரேய்னுக்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உக்ரேய்னிய வர்த்தக சமூகத்தினருக்கும் இடையேயான ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று முன்தினம்  நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.

துறைமுகம், போக்குவரத்து, மின்சக்தி, வர்த்தகம், உட்பட ஏனைய துறைகளில் இலங்கை பாரிய அபிவிருத்தியை எட்டியுள்ளது. முழு நாட்டையும் ஒரே சமயத்தில் ஒன்றிணைக்கக் கூடிய விதத்தில் வீதிப் போக்குவரத்து வலையமைப்பும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. துறைமுக அபிவிருத்தியினூடாக சர்வதேச வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதுடன் இதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு இவை பக்கபலமாகவும் வளங்களை பெற்றுக் கொடுக்கும் இடமாக உருவாகும் தினம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறான அபிவிருத்தி என்பவற்றினூ டாக இலங்கைக்கும் உக்ரேய்னுக்கும் இடையேயான உறவுகளை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகைகள் கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மிக விரைவில் உக்ரேய்ன் வர்த்தக சமூகத்தினர் இலங்கையில் முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என தான் வெகுவாக நம்புவதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

துறைமுகத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சக்தித்துறை, வர்த்தகத்துறை என்பவற்றில் பாரிய அபிவிருத்தி இலக்கை எட்டுவதற்கு ஆயுத்தமாகவுள்ளது. இந்த இலக்கை வெகு விரைவில் எட்டிவிடும் என்பதை இலங்கைக்குள் வரும் எவருக்கும் உணரக் கூடியதாகவுள்ளது. இவற்றைக் கண்கூடாகவே காண முடியும். கொழும்பு தெற்கு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் கட்டப்படுகிறது. இப்போது எமது நாடு ஆசியாவிலேயே ஆச்சரியம் மிக்க நாடாக மாறும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் உக்ரேனிய வர்த்தக சமூ கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply