லாகூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 50 பேர் பலி 200 பேர் காயம்
பாகிஸ்தான் லாகூரிலுள்ள மசூதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் 50 பேர் பலியானதுடன் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் பலரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலிபான் அல்லது அல்-கொய்தா தீவிரவாத இயக்கமே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply