கொங்கோ கிராமத்தில் பெற்றோல் வாகனம் வெடித்து 100 பேர் பலி

பெற்றோல் நிரப்பி வந்த வாகனம் ஒன்று வெடித்ததில் கொங்கோ குடியரசின் கிழக்கிலுள்ள கிராமத்தில் 100 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான்சானியாவிலிருந்து பெற்றோல் நிரப்பப்பட்ட வாகனம் வந்த போது, தாங்கியில் ஏற்பட்ட ஒழுக்குக் காரணமாக கிராமம் முழுவதும் எண்ணெய் பரவியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெற்கு கிவு பிரதேச செயலகப் பேச்சாளர் வின்செண்ட் கபாங்கா தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply