சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்

நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கான சகல ஏற்பாடுகளையும் விரைவுபடுத்த வேண்டு மென தெரிவித்த அமைச்சர், சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் அனைவரையும் விடு விக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றிய அமைச்சர் வடக்கின் மீள்கட்டமைப் பிற்காக நிதியுதவி வழங்கியுள்ள இந்திய அரசாங் கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது, தமிழ் மக்களுக்கான அமைதி, சமாதானம், ஜனநாயகம், வாழ்வியல் மற்றும் அரசியல் சமவுரிமை ஆகியவையே எமது இலட்சியமாகும். அதற்கான கனவுகள் இன்று நனவாகி வருகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாக செயற்படும் ஒரு சூழலில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசிய லுரிமை குறித்து சிந்திக்க முடியும்.

அத்தகைய சூழலொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறு வதுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரும் ஜனாதிபதிக்கு இந்தச் சபையில் நன்றி கூறியதை வர வேற்கிறேன்.

மனிதராலும் இயற்கையாலும் ஏற் படுத்தப்பட்ட அனர்த்தங்களின் மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் 7வீத வளர்ச்சியை நோக்கி அதிகரித்துள்ளது.

கைத்தொழில் துறையினரை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். ஏனைய பிரதேசங்களைப் போலவே யுத்தப் பாதிப்பு தேசங்களையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புத்தாக்குதல்களுக்கு ஊக்விப்பு வழங்தல், வாராந்தச் சந்தைகளை ஆரம்பித்தல், கைத்தொழில் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பனை வளம் எமது அமைச்சின் கீழ் உள்ளது. அதன் மூலம் அதனை நம்பியுள்ள கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கற்பகம் விற்பனைக் கிளைகளை நாடளாவிய ரீதியில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கைதடி ஆராய்ச்சி நிறுவனத்தை மீளத் திறப்பதுடன் அதன் தலைமை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply