ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டம் நடைபெறுகிறது

கொழும்பிலுள்ள ஐநா அலுவலகம் முன்பாக பாரிய ஆர்பாட்டமொன்று நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தே அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது. தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலை 10 மணிக்கு ஹைட் பாக் கோனரில் இந்த ஆர்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply