இந்திய மாணவர்மீது ஆஸ்திரேலியாவில் மீண்டும் தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்த சில தினங்களில் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹெர்வீர்சிங் என்ற மாண்வரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவில் உள்ள ரிங்வுட் பகுதியில் படித்துக் கொண்டே பகுதிநேர வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத் தினத்தன்று இரவு இவர் வேலை முடிந்து தான் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தபோது, சுமார் 5 பேர் இவரைச் சுற்றி வளைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவர் வைத்திருந்த பணத்தைப் பறிக்க முயன்ற வேளை, ஹெர்வீர்சிங் அவர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் இவர் நடந்ததைக் கூறியுள்ளார்.

பொலிசாரைக் கண்டதும் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்த ஹெர்வீர்சிங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிசில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்திய மாணவரை தாக்கிய கும்பலைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply