கிளிநொச்சியில் மூன்று ஆடைத் தொழிற்சாலை வன்னி இளைஞர், யுவதிகள் 10,000 பேருக்கு தொழில்
கிளிநொச்சியில் அமைக்கப்படும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் 10,000 இளைஞர் யுவதிகளுக்கு டிசம்பர் மாதமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திடடத்தின் மூன்றாவது வாசிப்பு குழுநிலை விவாதங்கள் ஆரம்பமாகின.
இளைஞர் விவகார, கல்வி, உயர்கல்வி, விளையாட்டுத் துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இளைஞர் விவகார பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் வன்னி மாவட்டத் துக்கு விஜயம் செய்து அப்பகுதியின் அபிவிருத்தி பற்றி பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் இவற்றை நாமல் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் முன்னெடுத்துக் செல்கின்றோம்.கிளிநொச்சியில் மூன்று ஆடை உற்பத்தி தொழிற் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பாக முதலீட் டாளர்களுடன் பேச்சு நடத்தப் பட்டுள்ளதுடன் அவர்களும் இப்பகுதியை சென்று பார்வை யிட்டுள்ளனர்.
இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் 6000 பேருக்கு நேரடியாகவும், 4000 பேருக்கு மறைமுகமான வேலை வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply