கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேற படையினர் தொடர்ந்தும் முயற்சி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நோக்கி முன்னேற முயற்சிக்கும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சிமுறிகண்டியிலும், முல்லைத்தீவு தண்ணீரூற்று தெற்கு பகுதிகளிலும் தற்போது நிலைகொண்டுள்ள படையினர், புலிகளின் நிலைகள் மீது கடும் ஷெல் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னகர்ந்து வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

புலிகளால் மேற்கொள்ளப்படும் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் மேடுகள் பலவற்றை தகர்த்தவாறே இந்த முன்னகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது

கிளிநொச்சியில் அடம்பன், முல்லைத்தீவின்ஒலுமடு கிழக்கு, குமிழமுனை, ஆகிய பகுதிகளை நோக்கியே படையினரின் முன்னகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயறிசியினை எதிர்க்கொண்டு முறியடிக்கும் வகையில் புலிகளால் நடத்தப்பட்ட எதிர்த் தாக்குதல்களில் படைத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ள அதேவேளை படையினரின் பதில் தாக்குதல்களில் புலிகளும் பாரிய இழப்புக்களுக்கு எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று காலை முதல் மாலை வரையில் பல தடவைகள் மேற்படி பிரதேசங்களில் உக்கிரமடைந்த இரு தரப்பு மோதல்களை அடுத்து படையினரால் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குமிழமுனைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் கடற்புலிகளுக்குச் சொந்தமான தற்கொலைப் படகொன்று உட்பட மேலும் சில ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply