சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளிக்கமாட்டேன் : சரத் பொன்சேகா
எந்தவொரு சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்திலும் தான் பொய்யான வாக்குமூலங்களை அளிக்க போவதில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் பொய்யான வாக்குமூலங்களை அளிக்க தயாராகிவருகிறார் என நேற்றைய தினம் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம்சாட்டியமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு ஒரு பொய் வாக்குமூலம் வழங்குவதால் தனக்கே பல பிரச்சனைகள் எழும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply