விமல் வீரவன்ச அமைச்சர் பதவியை துறந்தார்
வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் நாம் கேட்ட போது அமைச்சரின் இராஜினாமா தொடர்பான கடிதம் ஏதும் தனக்கு கிடைக்க வில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாகவே இது தொடர்பில் தான் அறிந்து கொண்டதாகவும் கூறினார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைக் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply