68 மேலதிக வாக்குகளால் பட்ஜட் சபையில் நிறைவேறியது

நடப்பாண்டுக்கான (2010) வரவு செலவுத் திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டப் பிரேரணைக்கு ஆதரவாக 139 வாக்குகளும், எதிராக 71 வாக்குகளும் கிடைத்தன.68 மேலதிக வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஐ. தே. கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த போதும், அந்தக் கட்சியைச் சேர்ந்த கண்டி மாவட்ட எம். பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஆதரவாக வாக்களித்தார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே. வி. பி. ஆகிய கட்சிகள் பட்ஜட்டுக்கு எதிராக வாக்களித்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான எம். பிக்கள் நேற்று வருகை தந்திருக்க வில்லை. பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் ஒரு மணிக்கு மீண்டும் கூடும்.

இதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்ற ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். ஜுன் மாதம் 29 ஆம் திகதி பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவினால் பாராளுமன்றத்தில் 2010 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply