ஓமந்தை சோதனைச்சாவடி சன்னாசிபரந்தனுக்கு மாற்றம்

இதுவரை காலமும் வவுனியா – ஓமந்தைப் பகுதியிலிருந்த இராணுவ சோதனை நிலையம் அண்மையில் “ஏ9′ வீதியில் புளியங்குளம் சந்திக்கு மாற்றப்பட்டிருந்தது. புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் படையினர் பெருமளவு தூரத்தை தம்வசப்படுத்தியுள்ளதால் புளியங்குளம் சந்தியிலிருந்து சன்னாசிபரந்தன் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  வவுனியா புளியங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வன்னிக்கான இராணுவ சோதனை நிலையம் தற்போது புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் சன்னாசிபரந்தன் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து வவுனியா வருவோர் இந்த பாதை வழியாகவே நுழையவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சோதனை நிலையத்திலிருந்து வவுனியா வரை பயணிகள் போக்குவரத்திற்கு பஸ்சேவைகள் நடத்தப்படுகிறது. சன்னாசிபரந்தனில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து வன்னிக்குச் செல்லும் பயணிகள் வழமைபோல ஓமந்தை சோதனை நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply