ஒரு படைவீரரையேனும் சர்வதேச நீதிமன்றில் ஆஜர் செய்ய இடமளிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி

ஒரு படைவீரரையேனும் சர்வதேச நீதிமன்றில் ஆஜர் செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.என்.பி கட்சியினருக்கு உறுதியளித்துள்ளார்.கடந்த வருடத்தில் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எந்தவொரு படைவீரரும்,  சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கம் படைவீரர்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அடி பணியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஜனாதிபதியின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச தனது உண்ணா விரதப் போராட்டத்தை கைவிட்டதாக ஜே.என்.பி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply