பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய சீமான் கைது செய்யப்பட்டார்

வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய வழக்கில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார். ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், இதற்குமேல் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சீங்களவர்களை விடமாட்டோம் என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்தவுடன் சீமான் தலைமறைவானார்.

இந்நிலையில் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை இன்று சந்திப்பதாக சீமான் கூறியிருந்தார். பிரஸ் கிளப்பில் பேட்டி தரும் முன்னரே சீமானை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி சிவானந்தா சாலை, வாலஜா சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை 12 மணி அளவில் சீமான் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க வந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply