கிளிநொச்சியில் அமைச்சரவை நடத்துவது ஒரு கேலிக்கூத்து : ததேகூ

கிளிநொச்சியில் எதிர்வரும் 14ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பது வெறும் கேலிக்கூத்தாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,

“அமைச்சரவைக் கூட்டம் நடத்துவதற்கு முன், கிளிநொச்சி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதைவிட்டு அமைச்சரவைக் கூட்டம் நடத்த நினைப்பது வெறும் அரசியல் பித்தலாட்டம்.

அமைச்சரவைக்கூட்டம் நடத்த செலவிடும் பணத்தை அம்மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடுதல் சிறப்பு. கிளிநொச்சியைக் காணாதவர்கள் எவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களைவிட, பலமுறை கிளிநொச்சி சென்றவர்களே இன்று அமைச்சரவையில் உள்ளனர்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply