இலங்கை வருகிறது நிபுணர் குழு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உறுதிப்படுத்தினார்

இலங்கையில் கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் சீராக இடம்பெற்று வருகின்றனவா? என்பதைக் கண்காணிக்க இந்திய நிபுணர்கள் குழுவொன்று நேரில் விஜயம் செய்ய உள்ளது. இந்நிபுணர் குழுவினர் மக்கள் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டு தகவல்களை திரட்டிக் கொள்வார்கள்.

இக்குழுவினரின் வருகையை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உறுதிப்படுத்தினார்.மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குகின்றமை குறித்தும் இலங்கைக்கு விஜயம் செய்யும் இக்குழுவினர் பரிசீலிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply