அரச சேவையாளர்களுக்கு 2ஆம் மொழி கட்டாயம் : அரசு தீர்மானம்

அரச சேவையில் இணைந்துள்ளவர்களுக்கு இரண்டாவது மொழியைக் கட்டாயமாக்க அரசு தீர்மானித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரச சேவையில் இணைந்தவர்களுக்கு இரண்டாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கென அரச ஊழியர்களுக்கு இரண்டாம் தர மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மொழித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாகத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.இது தொடர்பான கருத்தரங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சகல மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 45 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் மொழித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply