அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மறுபரிசீலனை செய்யப்படும்

ஈழத் தமிழர்களை சந்திக்க தென்னிந்திய தமிழ் நடிகர், நடிகைகள் இலங்கை பயணிக்கலாம் என்று தெரிய வருகின்றது. இதன் மூலம் நடிகை அசின் இலங்கை சென்ற விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டமையை நடிகர் சங்கம் கண்டித்திருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியும் அரசிடம் அளித்தது. போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் முடங்கியுள்ளனர். ஏராளமானோர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். போரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையி்ல் கடும் எதிர்ப்பை மீறி படப்பிடிப்புக்காக இலங்கை சென்ற நடிகை அசின், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியுடன் ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்தார். யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்குள் சென்ற தனது சொந்த செலவில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இது குறித்து கூறுகையில், நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்கின்றமை பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்றுதான் சங்கத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது என்றும் அசின் தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார் என்றும் எனவே அசின் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது என்றும் சரத் குமார் அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply