ஆஸி. வருவோர் பயங்கரவாதிகளல்லர் : கிளைவ் வில்லியம்ஸ்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நாடிவரும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகளேயன்றி பயங்கரவாதிகளல்லர் என பயங்கரவாத விவகார நிபுணர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் பயங்கரவாதிகள் என இலங்கை அரசாங்கம் கூறி வருவது ஒரு கட்டுக்கதை என அவுஸ்திரேலியாவின் ஏஜ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் ஒரு காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள், அவர்களின் ஆளுகையின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகள் எனக் கூறிவிட முடியாது.

இரத்தக் கறைகளுடனான தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு வர அனுமதிப்பதை நானும் எதிர்க்கின்றேன். ஆனால் அவுஸ்திரேலியா வரும் 99 சதவீதமான தமிழர்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply