கொழும்பிலிருந்து, வவுனியாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் புகையிரதசேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

கொழும்பிலிருந்து, வவுனியாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் புகையிரதசேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 
 
பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து, வவுனியாவுக்கான புகையிரத சேவைகள் மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியாவரை தொடரும் எனவும்,  சமூக சேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமையவே புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வவுனியா வரையான புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த போதும், மதவாச்சியிலிருந்து வவுனியா வரையான பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் நாளை முதல் நேரடி சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ஈ.பி.டி.பி. கட்சி அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு புகையிரதநிலையத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து வவுனியாவுக்கான புகையிரத சேவைகள் மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டன. புகையிரதத்தில் வவுனியா செல்பவர்கள் மதவாச்சிவரை புகையிரதத்தில் சென்று பின்னர் அங்கிருந்து பேரூந்துகள் மூலம் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

அதேபோலவே, பேரூந்துகளில் செல்பவர்களும் தென் பகுதியிலிருந்து மதவாச்சிவரை ஒரு பேரூந்திலும் பின்னர் மதவாச்சியிலிருந்து அப்பால் பிறிதொரு பேரூந்திலும் செல்லவேண்டிய நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply