ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 2 லட்சம்

போரில் இடம்பெயர்ந்த வடபகுதி மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒபந்தத்தை இந்திய அரசாங்கம் மஹாராஸ்டிரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச் சபையிடம் வழங்கியுள்ளது. அண்மையில் இந்த நிர்மாணப்பணியக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது உறுதியளிக்கப்பட்டபடி இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன. உத்தேச வீடமைப்புத் திட்டத்திற்கு அமைய ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு இந்தியா 2 லட்சம் ரூபாவை செலவிடவுள்ளது.

இதனடிப்படையில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க ஆயிரம் கோடி ரூபாவை இந்திய அரசாங்கம் செலவிடவுள்ளது. இந்த வீடமைப்பு நிர்மாணப்பணிகள் தொடர்பாக ஆராய மஹாராஸ்ரா வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச் சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply