தமிழ் தொண்டு நிறுவனத்திற்கு கனடாவில் தடை
கனடாவில் இயங்கி வந்த ஒட்டாவா தமிழ் அகதிகளுக்கான சமுக சேவை நிறுவனத்தின்; பதிவுகளை, கனேடிய வருமான வரித்துறையினர் ரத்து செய்துள்ளதாக கனேடிய வரிவருமான சட்டத்தின் 168 – 1ம் இலக்க சரத்தின் கீழ், நேற்று அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நிதிகளை கையாள்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பில் குறித்த நிறுவனம் முறையாக செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு அதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ் அமைப்பினால் சுமார் 7 லட்சத்து 13 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், பெயர் குறிப்பிடாத அமைப்பு ஒன்றுக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி தமிழீழ விடுதலைப்புலிகள் அல்லது அதற்கு சார்பான அமைப்பு ஒன்றுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என கனேடிய வரிவருமானத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply