நல்லூர் திருவிழாவில் மேற்கத்தைய ஆடைகளை அணியத் தடை

நல்லூர் திருவிழாவின் போது மேற்கத்தைய ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாட்டை பேணிப் பாதுகாக்கக் கூடிய வகையிலான ஆடைகளை மட்டுமே அனுமதிக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

நல்லூர் திருவிழாவிற்கு பெரும் எண்ணிக்கையிலான புலம் பெயர் தமிழர்கள் வருகை தரக் கூடும் எனவும், அவர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு புறம்பான ஆடைகளை அணிந்து கொண்டு திருவிழாவில் பங்கேற்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், முன்கூட்டியே ஆடைகள் தொடர்பான தடை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான ஆடைகளை அணிய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் விளக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள திருவிழா 25 நாட்களுக்கு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply