கிரமமான முறையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் : விநாயகமூர்த்தி முரளீதரன்

கிரமமான முறையில் வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.உயர் பாதுகாப்பு வலயத்தில் நிலைகொண்டுள்ள படையினரை படிப்படியாக அகற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உயர்பாதுகாப்பு வலயங்களில் வாழ்ந்து வந்த 62000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்கள் கிரமமான முறையில் மீள் குடியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, தமக்கு உறுதியளித்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடமராட்சியில் இவ்வாறு பொதுமக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றிக் கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, உயர்பாதுகாப்பு வலயங்கள் மக்கள் மீள் குடியேற்றப்படுவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply