இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம் : கருனாநிதி
இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என முதல்வர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்திருக்கின்றனர். இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான் சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கையில் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்துப்படுவதில் உள்ள சிக்கல் பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தனர். இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டைப் பொருத்தே மற்ற நாடுகளின் நடவடிக்கைகள் அமையும் என்பதால் கடந்த சில நாள்களாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம் என முதல்வர் உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பி.க்கள் கூறினர். இலங்கைத் தமிழர் நிலைபற்றி தமக்குத் தகவல் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் கூடுதல் தகவல்களைக் கூறினால், அவற்றை சோனியாவின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என முதல்வர் கூறியதாகவும் எம்.பி.க்கள் குழுவினர் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply