ஐநா நிபுணர் குழுவானது ஒரு ஆலோசனைக் குழுவே

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பாங் கீ மூனால் நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவானது ஒரு ஆலோசனைக் குழுவே தவிர சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு குழு அல்ல என அமெரிக்காவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பளெக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ளமை தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் தனது பழைய நண்பர்களை காணக்கூடியதாக இருந்தமையும் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரொபட் ஓ பளெக் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி, அமைச்சர் பீரிஸ், அரச தரப்பு பிரதிநிதிகளையும் சந்திக்கக்கிடைத்தமை மகிழ்ச்சி தருவதாகவும் ரொபட் ஓ பளெக் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply