பசில் தலைமையில் யப்பானுக்கு அரச உயர்மட்டக் குழு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான அரச உயர்மட்டக் குழு ஒன்று இன்று ஜப்பானுக்கு விஜயம் செய்கின்றது. இக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் இடம்பெறுகின்றார். இக்குழுவினர் மூன்று நாட்கள் வரை யப்பானில் தங்கி இருப்பார்கள். இரு நாடுகளின் உறவுகளையும் வலுப்படுத்திக் நோக்கில் இந்த நல்லெண்ண விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்கள் அந்நாட்டின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசுவார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply