மனிதநேய உதவி தேவைப்படும்வரை இருப்போம்: ஐ.சி.ஆர்.சி.

உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் தேவைப்படும்வரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் தங்கியிருக்குமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரட்ன கூறினார்.
 
மனிதநேய உதவிகள் தேவைப்படும்வரை நாங்கள் அங்கு தங்கியிருப்போம். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு அண்மையிலேயே நாங்களும் தங்கியிருப்போம்” என அவர் தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டு புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்ட தமது அலுவலகம் தொடர்ந்தும் அங்கிருந்தே செயற்பட்டுவருவதாக சரசி விஜயரட்ன குறிப்பிட்டார்.

ஓமந்தை வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் முன்நகர்வு நடவடிக்கையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து விலகி, மோதல் நிலைமை தணிந்ததும் கடமைக்கும் திரும்பியிருந்தது.

இந்த நிலையில் புளியங்குளத்தில் இராணுவத்திரனர் புதிதாக அமைத்திருக்கும் சோதனைச்சாவடியில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

நிரந்தரமான சோதனைநிலையம் அமைக்கப்படும்வரை அதன் ஊடாகப் பயணிக்கும் பொதுமக்கள், நோயாளர்காவு வண்டிகள் மற்றும் வாகனங்களின் பயணங்களுக்கு நாம் உதவிசெய்வோம்” என சரசி விஜயரட்ன கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 11 சடலங்கள் சர்வதேச செஞ்சிவைச் சங்கத்தின் ஊடாக வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply