தமிழர்கள் மட்டும் பதிவுக்கு உட்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது
தமிழர்கள் மட்டும் பதிவுக்கு உட்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் காவல்துறையினர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெள்ளவத்தை மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்களை மட்டும் பதிவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனோ கணேசன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
எவ்வாறெனினும், தமிழர்கள் மட்டும் பதிவுக்கு உட்படுத்தப்படவில்லை என கொழும்புப் பிராந்திய பிரதிக் காவல்துறை மா அதிபர் எச்.என்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு நடவடிக்கைகள் விரைவில் நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply