200 அகதிகளுடனான கப்பல் கனடா கரையை அண்மிக்கிறது: உறுதிப்படுத்துகிறது அமெரிக்கா
உலகின் பார்வையையே தன்பக்கம் திருப்பி கடந்த நான்கு மாதங்களாக இங்கே நிற்கிறது, அங்கே நிற்கிறது என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட தாய்லாந்தில் பதியப்பட்ட கப்பல் கனடாவின் கரையை எப்போதும் அடையலாம் என அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற் கண்காணிப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது. விடுதலைப்புலிகளின் கப்பல் என இலங்கை அரசாலும் மேற்குலக ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இக்கப்பலில் அகதி அந்தஸ்துக்கோரும் 200க்கு மேற்பட்டோர் பயணிக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இக் கப்பலின் நிலை பற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி அமெரிக்க அதிகாரி, தாய்லாந்துக் கொடி யுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கரையை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
மேற்படி அமெரிக்க பசுபிக் பிராந்தியக் கடற் கண்காணிப்புப் பிரிவு தனது எல்லைக் குட்பட்ட 12 கடல் மைல் தூரத்தையே கண்காணிப்பதால் இக் கப்பல் கரையை அண்மித் தவாறே பயணிக்கிறது என்றே நம்பப்படுகிறது. கனடாவின் கடல் எல்லைக்குள் இக்கப்பல் நுழையும் வரை கனடாவால் இந்த விவகாரத்தில் ஒன்றுமே செய்ய முடியாது என்பதும், சர்வதேச நீர்ப்பரப்பிலிருந்து அது கனடாவின் நீர்ப்பரப்பிற்குள் நுழைய எத்தனிக்கும் போது கனடியக் கடற்படையால் தடுத்து நிறுத்த முடியும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.
மேற்படி கப்பல் விவகாரம் தொடர்பான விசாரணையில் பல நாடுகள் பங்களிப்புச் செய்து இக் கப்பலின் பயணத்தைக் கண்காணித்ததுடன், தமிழர்களின் வரலாற்றில் இவ்வாறு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒரு கப்பல் இவ்வளவு அகதிகளுடன் பயணிப்பது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply