மன்னாரில் கோழி இறைச்சி விலை குறைகின்றது–சமயல் எரிவாயு (காஸ்) விலை அதிகரித்துள்ளது
மன்னாரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கோழி இறைச்சியின் விலை திடீரென வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அது தற்போது ஒரு கிலோகிராம் 500 ரூபாவாக விற்பணை செய்யப்பட்டு வரும் நிலையில் சமயல் எரிவாயுவின் விலை ரூபா 1810 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
மன்னார் பகுதிக்கான இறைச்சி கோழிகள் மதவாச்சி மற்றும் நாட்டின் தென்பகுதிகளிலிருந்தே பெருமளவில் எடுத்துவரப்படுகின்ற நிலையில் கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டை ஒட்டி மன்னாரில் கோழி இறைச்சியின் விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆயினும் ஒருசில தினங்களாக மன்னாரில் கோழி இறைச்சியின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது இது மன்னார் மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்ற போதும் சமயல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் 700 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி இறைச்சி தற்போது 500; ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வரும் அதேவேளை ரூபா 1650 இற்கு விற்பனை செய்யப்படவேண்டிய சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்று 1810 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் இயங்கி வரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையங்களிலும் சமையல் எரிவாயு அதிகரித் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply