மட்டக்களப்பு சிறைச்சாலையில் பள்ளிவாசல் திறந்து வைப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்ற முஸ்லிம் கைதிகளின் சமய வழிபாடுகளுக்காக ஆறு இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் சங்கத் தலைவருமான பிலால் ஹாஜியாரின் வேண்டுகோளின் பேரில் கொழும்பிலுள்ள தனவந்தர் யாஸீன் பாய் என்பவரின் நிதியுதவியுடன் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தின் இதனைத் திறந்து வைத்துத் தொழுகை நடத்தினார். இத்திறப்பு விழாவில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள், உலமாக்கள் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கித்சிறி பண்டார ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply