வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சந்திக்க கூட்டமைப்பு முயற்சி

வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிப் போராளிகளைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சரணடைந்த, கைது செய்யப்பட்ட புலிப் போராளிகள் வெலிக்கந்தையில் எதுவித விசாரணையும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? இவர்கள் மீது வழக்குத் தொடரப்படுமா? போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களான பொன்.செல்வராசா, ப.அரியநேத்திரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் வெலிக்கந்தை சென்று நிலைமையை நேரில் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply