கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதென ஐநா உறுதிப்படுத்திய பின்னரே மீளக்குடியேற்றம்
யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் உள்ளோரில் இன்னும் 35,333 பேர் மட்டுமே மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பின் சில பிரதேசங்களில் கண்ணிவெடி முழுமையாக அகற்றப்பட்டதென ஐநா உறுதிப்படுத்திய பின்னரே மீளக்குடியமர்த்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 700 பேர் விதம் அரசு மீளக்குடியமர்த்தி வருவதாகவும் இதுவரையில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இதுவரையில் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply