இலங்கை விஞ்ஞானிகள் வடக்கு கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும் : ஜனாதிபதி

 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதால் இலங்கையில் உள்ள விஞ்ஞானிகள் வடக்கு கிழக்கிற்கு சென்று தமது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.சிறந்த ஆய்வுகள் மற்றும் விஞ்ஞானத்திற்கு வழங்கப்படும் சிறந்த ஆய்வுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், “விஞ்ஞானிகளது அறிவு இல்லாமல் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்களது உதவியின்றி நாட்டில் எந்தத் துறையையும் முன்னேற்ற முடியாது. இவர்கள் மூலம் தனியார் துறையினரே பெருமளவில் நன்மையடைகின்றனர்” எனத் தெரிவித்தார்.

ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக 475 விஞ்ஞானிகள் ஆராய்ச்;சியாளர்கள் ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply