மன்னாரில் முஸ்லீம்கள் நோன்பிற்காக தயாராகுகின்றனர்
மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் முஸ்லீம்கள் எதிர்வரும் றம்ழான் நோன்பு பண்டிகைக்காலத்திற்காக முன்னாய்த்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். மன்னாரிலிருந்து 1990ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில்; சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இதுவரைகாலங்களிலும் மன்னாரில் மீள்குடியேறியிருக்கின்றனர்.
இவ்வாறு மீள்குடியேறியவர்களில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மூர்வீதி, உப்புக்குளம், பெரியகடை, தாராபுரம், எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு, பெரியகரிசல், காட்டாஸ்பத்திரி, தலைமன்னார் துறை, ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர்.
அதேவேளை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இலந்தைமோட்டை, அளவக்கை, உள்ளிட்ட பகுதிகளிலும் மாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் விடத்தல்தீவுப்பகுதியிலும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் ரசூல் புதுவெளி, கூழாங்குளம், வேப்பங்குளம், பண்டாரவெளி, முசலி, மேத்தன்வெளி, சிலாவத்துறை, ஆகிய இடங்களிலும் மீள்குடியேறியிரக்கின்றனர்.
தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியிருக்கும் முஸ்லீம் மக்கள் எதிர்வரும் றம்ழான் நோன்பு பண்டிகைக்காலத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஜூம்மா பள்ளிகளை புணரமைப்புச் செய்து தமது மார்க்கக் கடமைகளை சிறப்பாக அனுஸ்டித்து வருகின்றனர். அதேவேளை முஸ்லீம் பெண்களின் திறாவியாத் தொழுகைக்கான ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply