முறிகண்டியில் மீள் குடியேற்ற சிக்கல்

இலங்கையின் வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது. நாட்டின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் உள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களே இப்படியான சிக்கலில் மாட்டியுள்ளார்கள்.

அவர்ளை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த முடிவு தமது விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டிருப்பதாக்க அப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர். இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேற்றத்திற்காக மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்டு சாந்தபுரம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். எனினும் தங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பதிலாக மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் இப்போது அனுமதி மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

முறிகண்டி பிரதேசத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவான நிலப்பகுதி அரசாங்கத்தின் தேவைக்காக எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையடுத்து. இந்தப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வேறிடத்தில் காணிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்குப் பணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்ற போதிலும் அதனால் பயனேதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply