G.s.p+ நிறுத்தத்தால் பாதிப்புக்கு இடமில்லை ஸ்திரமான நிலையில் பொருளாதாரம்

ஜீ. எஸ். பி. சலுகை ஓகஸ்ட் 5ம் திகதியுடன் ரத்தாகின்ற போதும் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு முகம் கொடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 6.2 பில்லியன்களாக உயர்ந்துள்ளதாகவும் இதனூடாக ஒரு வருடத்துக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் இறைமை, கெளரவம் என்பவற்றை விட்டுக் கொடுக்காமல் ஜீ. எஸ். பி. பிளஸ் சலுகை தொடர்பில் செயற்பட நாம் தயாராக உள்ளோம். இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கான பின்னணி அமைக்கப்பட்டு ள்ளது.

வெளிநாட்டுக் கையிருப்பு 6.2 ஆக உள்ளதோடு டொலரின் பெறுமதியும் 105 ரூபாவாக குறைந்துள்ளது. போட்டி அடிப்படையில் உலகச் சந்தையில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஆடைத் தொழிற்துறையி னருக்கு அவகாசம் உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். ஆனால், 2009 மே மாதத்தில் 1.2 பில்லியனாக குறைந்திருந்த எமது வெளிநாட்டு கையிருப்பு வருட இறுதியில் 4 பில்லியன்களாக உயர்ந்தது. தற்போது 6.2 வீதமாக உள்ள கையிருப்பு அடுத்த காலாண்டில் 7.5 பில்லியன்களாக அதிகரிக

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Both comments and pings are currently closed.

Comments are closed.