கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாக பிச்சைக்காரர் இருவர் சந்தேகத்தில் கைது

கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு உதவியதாக இரண்டு பிச்சைக்கார்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி புறக்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைக் குண்டுதாக்குதலுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆண்-பெண் பிச்சைக்காரர் இருவரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, லிந்துல பகுதியைச் சேர்ந்த ஆண் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். 1980ஆம் ஆண்டு முதல் ரயில் சிற்றூண்டிச்சாலையில் பணியாற்றிய சம்பந்தப்பட்டஆண் , 2000ஆம்ஆண்டு ரயிலிலிருந்து வீழ்ந்து கால்களை இழந்ததாகத் தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் 2001ஆம் ஆண்டு முதல் பிச்சையெடுத்து வருவதாகவும், ரயில்களிலேயே அவர் பெரும்பாலும் பிச்சையெடுப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு-வவுனியா ரயில்களில் பிச்சையடுத்த அவர், குறிப்பிட்ட பிச்சைக்காரப் பெண்ணை ரயிலில் சந்தித்துள்ளார். ரயில் நிலையத்துக்கு வெளியே தமது தங்குமிடத்தை இவர்கள் அமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் பற்றி அறிந்துகொண்ட ரயில் நிலைய அதிகாரிகள் அவர்களை ரயில்களுக்குள் பிச்சையெடுக்க அனுமதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் ரயில் நிலையத்துக்கு வெளியேயுள்ள நபர் ஒருவரிடமிருந்து தற்கொலை அங்கியைப் பெற்றுவந்து அங்குள்ள பெண் ஒருவரிடம் வழங்கியதாகவும், இதற்காக அவர்களுக்கு 25,000 ரூபா வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply