வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீதான பயண எச்சரிக்கை பிரிட்டனால் முற்றாக நீக்கம்
வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்தானிய பிரஜைகள் செல்லக் கூடாது என்று பிறப்பித்திருந்த இருந்த பிரயாண எச்சரிக்கையை பிரித்தானிய அரசு இன்று முதல் இல்லாமல் செய்துள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இப்பிரயாண எச்சரிக்கை முடிவுக்கு வந்துள்ளது. ஆயினும் கண்ணிவெடி அபாயம் இம்மாவட்டங்களில் காணப்படுகின்றமை குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே இம்மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்றும் பிரித்தானிய அரசு அதன் பிரஜைகளுக்கு ஆலோசனை கூறி உள்ளது.
வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கு பிரித்தானியர்கள் செல்லவே கூடாது என கடந்த வருடம் மே மாதம் பிரித்தானிய அரசினால் பிரயாண எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின் திருகோணமலை, அறுகம்குடா, ஜால தேசிய பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்லலாம் என்று இந்த எச்சரிக்கை இரு மாதங்களில் தளர்த்தப்பட்டது என்பதும் அதன் பின் கிழக்கு மாகாணத்தின் எல்லா இடங்களுக்கும், யாழ் மாவட்டத்துக்கும் செல்லலாம் என்று இந்த வருடம் ஜனவரி மாதம் பிரயாண எச்சரிக்கை தளர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் அனைத்துக்கும் பிரித்தானியர்கள் சென்று வரலாம் என்பது பிரித்தானிய அரசின் தற்போதைய அவதானம் ஆகும் என்பது வெளிப்படை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply