பொய்யான செய்திகளுக்கு நிராகரிப்பும் கடும் கண்டனமும் சிறீ ரெலோ செயலாலாளர் நாயகம் : திரு.உதயராசா
சிறீ ரெலோ அமைப்பின் மீது எந்தவொரு ஆதாரமுமற்ற குற்ற சாட்டுகளைச் சுமத்தியிருக்கும் இணையத்தளச் செய்திகளைக் கண்டிப்பதோடு, அவற்றை முற்றாக நிராகரிக்கிறோம். அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கும் எமது அமைப்பிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இப்படிப் பட்ட செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். மிக விரைவில் உண்மை நிலைப்பாடு வெளிவரும்போது, தவறான செய்திகளை வெளியிட்டு, மக்களையும் முட்டாளாக்கி, குற்றவாளிகளையும் மூடிமறைக்க முயலும் இந்த இணையத்தளங்களின் நோக்கம் என்ன? இவர்களுக்கும் இந்தக் குற்றச் செயல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? அதனால் தான் இப்படியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் தம்மையும், சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ள செய்யும் முன்னேற்பாடா? முன்னொருமுறை வங்கி ஊளியர் ஒருவர் வவுனியாவில் கடத்தப்பட்ட போது, எமது அமைப்பின் மேல் இதே இணையங்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இறுதியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, எமது அமைப்பிற்கும் அக்குற்றத்திற்கும் எந்த தொட்ர்பும் இருக்கவில்லை என தெளிவாகியது. இப்படியிருந்தும் ஏன் இந்தமாதிரியான செய்திகளை வெளியிடுகிறார்கள்? என சிறீ ரெலோ அமைப்பின் செயலாலாளர் நாயகம் திரு உதயராசா, இது சம்பந்தமான எமது கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஊடகங்கள் காத்திரமான பணியை செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் முன்னோடிகளாக, வழிகாட்டிகளாக விளங்க வேண்டியவர்கள். உண்மை எதுவென மக்களுக்கு எடுத்துக் கூறவும், அனியாயங்களை தெரியப்படுத்தவும், சரியான செய்தியை விரைவாக அறிவிக்கவும் கடப்பாடு உடையவர்களே உண்மையான ஊடகவியலாளர்கள். அப்படிப்பட்ட கண்ணியமான ஊடகங்களும், இணயங்களும் எம்து மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான கேவலமானவர்களும் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். கத்தி எடுத்தவன் எல்லாம் சண்டைக் காரனும் இல்லை, பேனா எடுத்தவன் எல்லாம் எளுத்தாளனும் இல்லை, பத்திரிகை நடத்துபவர் எல்லோரும் ஊடகவியலாளரும் இல்லை என்ற உதாரணம் இந்த இணையங்க்களுக்கு சரியாகப் பொருந்துகிறது. நாம் எதை எழுதினாலும் மக்கள் நம்புவார்கள் என்ற அதீத நம்பிக்கை தான் இப்படிப் பட்ட மன நோயாளிகள் உருவாகக் காரணம். மக்கள் இவர்களை இனம் கண்டு, இவர்களின் பொய்ச் செய்திகளை நிராகரிப்பதோடு, இப்படிப்பட்ட புல்லுருவிகளை தூக்கி எறியவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.
வவுனியா நகரில் நடை பெறும் காணி கொடுப்பனவு பற்றிய குற்றச்சாட்டுகளைப் பற்றி அவரிடம் வினவிய பொழுது, அதற்குப் பதில் அளித்த திரு. உதயராசா அவர்கள், நான் வன்னியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். திரு. நிமோ அவர்களும் அப்படியே. வெளி நாட்டிலிருந்து தாயக உறவுகளுக்கு உதவும் நோக்கோடு வன்னி வந்தவர். எமது பிரதேச மக்களே அதிகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். இதை விமர்சிப்பவர்கள் வன்னிப் பிரதேசத்தை சேராதவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை, அரச காணிகளில் குடியேற்றும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். அரச காணிகள் என்பது, அடர்ந்த காடுகளே. இவற்ரை வெட்டி, சீர் செய்து, தண்ணீர் வசதிகள், பாதை அமைத்தல், பாடசாலை, கழிப்பிட வசதிகள், போக்கு வரத்து வசதிகள் என ஒரு பாரிய மக்கள் குடியேற்ற்த்திற்கான சகல திட்டங்களையும் எமது அமைப்பே முன்னின்று கடந்த ஒன்றரை வருட காலமாகச் செய்து வருகிறது. இதற்கு பல உள்நாட்டு மற்றும் புலம் பெயர் உறவுகள் பல வழிகளில் உதவி வருகிறார்கள். மேலும் சகல தமிழ் கட்சிகளும் பாரபட்சமின்றி இந்த முயற்சிக்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தன. இப்போது இங்கு குடிகொண்டுள்ள மக்களுக்கு காணி உறுதி சட்ட ரீதியாகப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில், அரச அதிகாரிகளின் உதவியோடு அளத்தல், வரைபுகள் மற்றும் உறுதிகள் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான செலவுகளை எமது அமைப்பும், இங்குள்ள மக்களும் உள்நாட்டு மற்றும் புலம் பெயர் உறவுகளும் ஏற்றுக் கொள்ளுகிறோம். இதைத்தான் இந்த ஈனப் பிறப்புக்கள் கேவலமான முறையிலே விமர்சித்திருக்கிறார்கள். எமது தாயக உறவுகளுக்கு உதவாது போனாலும் பரவாயில்லை, இப்படியான கேவலமான செயல்களைச் செய்யமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும். இப்பொழுது விளங்குகிறதா பாதிக்கப் பட்ட மக்களை எந்த மாடு முட்டுகிறதென்று? நெருப்பு. கொம் மற்றும் லங்க நியுஸ் வெப் ஆகியோர் தான். தாமும் உதவாமல், அந்த மக்களுக்கு உதவுபவர்களையும் விமர்சிக்கிறார்கள் என மனம் வருந்தினார்.
திரு கீரன் என்பவர் பற்றி கூறும் படி கேட்டதற்கு, திரு உதயராசா தொடருகையில், திரு.கீரன் அவர்கள் தமிழ் மக்கள் போராட்டதில், எண்பதுகளின் முதற் பகுதிகளிலேயே ஆர்வமுற்றவர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப கால சிற்பிகளில் ஒருவர். அதனால் வெலிக்கடைச் சிறையில் தனது இளமைப் பிராயத்தை கழித்தவர். தண்டனைகளின் கொடூரத்தால் மிகவும் பாதிக்கப் பட்டவர். இருந்தும் தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் தளராத ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். லண்டனில் வசிக்கும் அவர், யுத்தத்தால் பாதிக்கப் பட்ட சக உடன் பிறப்புகளுக்கு உதவ, நம் மண்ணில் கால் பதித்து, எம்மோடு கைகோர்த்து நின்று பல உதவிகளை முன்னின்று நடத்துபவர். அவரை விமர்சிக்கும் இந்த இணைய தள உரிமையாளர்கள், தமிழ் மக்களுக்காக, ஒரு எள்ளைக் கூட நகர்த்தாதவர்கள். நாம் மட்டுமல்ல, வெளி நாடுகளில் வாழும் பாரிய தமிழ் உறவுகள் அனைவரும் தஞ்சமடைந்தவர்களே. இவர்களும் வெளி நாடுகளில் தஞ்சமடைந்தவர்கள் தான். தம்மால் ஏதும் செய்ய முடியவில்லை என்ற பொறாமையால் வெந்து, எமது நாட்டிலிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கோடு வருபவர்களின் மீது வசை பாடுகின்ற சின்னத்தனம் கொண்டவர்கள். இப்படியான கேவலமானவர்களை, எமது மக்களுக்கு உதவ வருபவர்களை விமர்சிப்பவர்களை நாம் இனத் துரோகிகள் என்றுதான் அழைக்க வேண்டும். தன்னைப் பெற்ற தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலம், தனது இனதிற்கு நடக்கும் நல்ல விடயங்களை விமர்சிப்பது. தன்னை விட மூத்தவளை மணந்தவன் வாழ்க்கையில், சுய இன்பம் தான் ஒரே வழி, அதே போன்ற ஒரு சுய இன்பத்தை இப்படியான பொய்த்தகவல்களை வெளிடுவதன் மூலம் இந்த இணையத் தள உரிமையாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இவர்களின் இந்த “மூத்தாளை மணந்த காரணத்தினால், சுய இன்பத் தேடலினை” புரிந்தோ அல்லது புரியாமலோ தமது இனணையங்களிலும் வெளியிட்டவர்களுக்கு எனது வருத்தத்தினையும், புரிந்து கொண்டு வெளியிடாமல் எம்மோடு தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயற்சித்த இணையங்களுக்கும், இதயங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன், என தனது தெளிவான விளக்கத்தை முடித்துக் கொண்டார்.
எமது இணையங்களுக்கு இனிமேலும் அறிவு வருமா?
ஊடக அறிக்கை சிறீ ரெலோ
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply