மன்னாரில் இலங்கை வங்கியின் சேவையைப் பெறுவதில் வாடிக்கையாளர்கள் நீண்டநேரம் காத்திருப்பு
இலங்கை வங்கியின் மன்னார் கிளையில் நாள்தோறும் பாரிய சன நெரிசல் ஏற்பட்டு வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிகின்றது.1970 ம் ஆண்டளவில் மன்னாரில் அமைக்கப்பட்ட இரண்டாவது கிளையாக இலங்கைவங்கி விளங்குகின்ற போதும் அது மன்னார் மக்களின் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், கல்வி மற்றும் பல்வேறு பொதுத் தேவைகளையும் வெகு சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது.
இந்நிலையில் மன்னார் மக்களாலும் மற்றைய வங்கிகளாலும் பெரும் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற இலங்கை வங்கியின் மன்னார் கிளையின் செயற்பாடுகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக தெரியவருகின்றது.வங்கிக்குள் உட்பிரவேசிக்க முடியாதவாறு வெளியிலும் தினமும் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை காணமுடிவதாகவும் பணத்தை வைப்பலிடுவது மற்றும் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட வங்கிச்செயட்பாடுகளில் பலமணிநேரம் தாமதத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கணணி வலையமைப்பு அடிக்கடி செயலிழந்து போதல், தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் அடிக்கடி பழுதடைதல், போதிய ஊழியர் இன்மை, முகாமைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில்; போதிய தொடர்பாடல் இன்மை என பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இது இவ்வாரிருக்க மன்னாரில் தற்போது ஏழு வங்கிகள் இயங்கி வருகின்றபோதும் இலங்கை வங்கியில்தான் மிக நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் பல மணிநேரம்; காத்திருக்க வேண்டி இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply