போராளிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவர்
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். எட்டாயிரம் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளையும் ஒருமிக்க விடுதலை செய்து அனர்த்தங்களை எதிர்நோக்க தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சகல சிறைக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்தால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மூவாயிரம் விடுதலைப் புலி போராளிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் கடுமையான தடுப்பு முகாம்களில் 120000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை பற்றி எவரும் பேசுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு கிரமமான முறையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும், கட்டம் கட்டமாக அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply