10 ஆயிரம் பேருக்கு வடக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பு

அமெரிக்க அரசின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முழு நேர வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களும் இத்திட்டத்தில் கூட்டுச் சேர்ந்து காத்திரமான பங்களிப்புக்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட நிர்மாண துறையில் 5000 பேருக்கும் ஆடைக் கைத்தொழில் துறையில் 1800 பேருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 3000 பேருக்கும் ஆடைகளைச் சந்தைப்படுத்தல் துறையில் 700 பேருக்கும் இவ்வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளன.

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞர், யுவதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விசேட பயிற்சிகளின் பின்னர் இவ்வேலைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply